கல்வி

பிரதமர் மோடியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு....நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மனு

பிரதமர் மோடியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு....நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மனு

Rasus

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரக் கோரி தமிழக அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் மனு அளித்தனர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை அப்போது உடனிருந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நீட் தொடர்பான தமிழக அரசின் இரு மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தருமாறு அமைச்சர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மனு ஒன்றும் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. 

முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர். அவர்களிடமும், நீட் தொடர்பான கோரிக்கையை அமைச்சர்கள் முன்வைத்தனர்.