கல்வி

அரசு கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

webteam

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடந்துமுடிந்துள்ளது.

தற்போது முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ. 60. பட்டியலினத்தவர்களுக்கு ரூ. 2 என விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.