கல்வி

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பு... மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு

webteam

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர முனைவர் பட்டப் படிப்புகளில் சேர ஆர்வமும் தகுதியும் கொண்ட மாணவர்களிடம் இருந்து பொது நுழைவுத்தேர்வுக்கான (TURCET) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வில் தேர்ச்சிபெறுவோர் முனைவர் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

முனைவர் பட்டப்படிப்புகள்

வரலாறு, நுண்கலை வரலாறு, நுண்கலை, சிற்ப வரலாறு, தொல்லியல், இசை, பரதம், தமிழ், ஆங்கிலம், மொழிபெயர்ப்பியல், மொழியியல், அகராதியியல், சமூகப்பணி, கல்வியியல், மெய்யியல், யோகா, பண்பாடு, நாட்டுப்புறவியல், மானுடவியல், சித்த மருத்துவம், மருந்து அறிவியல், வேதியியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிர்த் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிப்புகளில் சேரலாம்.

கல்வித்தகுதி

உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10+2+3+2 என்ற அடிப்படையில் முதுகலை படித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் முதுகலைப் படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 5 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான தரத்தில் சலுகை வழங்கப்படும்.

பகுதிநேர முனைவர் பட்டப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு அரசுப் பல்கலைக்கழகம், அரசுக் கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, அரசு ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் ஓர் ஆண்டுகாலம் பணிபுரிந்திருக்க வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு காலமும், தொடக்கநிலை மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஐந்தாண்டு காலமும் பணிபுரிந்திருக்கவேண்டும். பணிபுரியும் நிறுவனத்தின் தடையில்லாச் சான்றைச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. ரூ. 500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக்கட்டணத்தை வங்கி வரைவோலையாக இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். அஞ்சல்வழியாகவும் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: பதிவாளார், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான தொடக்கநாள்: 4.9.2020

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.9.2020

விவரங்களுக்கு:
tuadmissionsection@gmail.com / www.tamiluniversity.ac.in / 04362 227089, 226720