கல்வி

இரண்டு ஆண்டுகளில் 1.39 கோடி புதிய பிஎஃப் சந்தாதாரர்கள்

webteam

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஃப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1.39 கோடி அதிகரித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ 2018-19, 2019-20 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் சந்தாதாரர்களின் புதிய சேர்க்கை எண்ணிக்கை 2018-19 ஆண்டிற்கான நிதியாண்டில் 61.12 லட்சத்திலிருந்து, 2019-20 ஆண்டு 78.58 லட்சமாக உயர்ந்தாக கூறப்பட்டுள்ளது. இது 28 சதவீத உயர்வாகும். சமீபத்தில் இபிஎஃப்ஒ (EPFO)வெளியிடுள்ள 2017 செப்டம்பர் முதல் உள்ள சம்பளப் பட்டியல் தரவுகளைத் தொகுத்ததில் இருந்து, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கட்டும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான போக்கையே இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வளர்ச்சியானது தொழிலாளர்கள் தங்களது பழைய கணக்கில் உள்ள நிலுவைத் தொலையை ஆன்லைன் வசதிகள் மூலம் எந்தவித சிரமங்களும் இல்லாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது எளிதாக்கப்பட்டது. மாற்றிக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ஆகவே அது ஒரு காரணமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கணக்கின் தொடர்ச்சி அறுபட்டுவிடாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

2019-20 ஆம் நிதி ஆண்டின் வயது வாரியான பகுப்பாய்வில் 26 முதல் 35 க்கு வரை நிகர சேர்க்கை முந்தைய ஆண்டை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதியில் உள்ள பணமானது ஒட்டுமொத்தமாக வைப்பு நிதியாக முடங்கிவிடாமல் அது புகழக்கத்தில் உள்ள பணமாக இருப்பதும் காரணமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. ஒருவர் தனது மணத் தேவை, கல்வி தேவை, மருத்துவ வசதி, வீட்டு வசதிக்காக அதனை எப்போதும் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தும் படி உள்ளதால் பயனாளர்கள் அதிகம் ஈர்க்கப்படுவதாக இந்தப் புள்ளிவிவரம் மேற்கொண்டு சில விளக்கங்களை அளித்துள்ளது.

ஆகவே இந்தப் புள்ளிவிவரத்தை கொண்டு அமைப்பு ரீதியிலான வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதை இது காட்டுவதாக மத்திய அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வேலையில் இருந்து வெளியேறியதால் கணக்கை முடித்த சந்தாதாரர்கள் மீண்டும் இணைவது 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.