கல்வி

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிக்கு பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் உதவி

webteam

பொருளாதார வசதியின்றி கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு, எஸ்ஆர்எம் வேளாண்மைக் கல்லூரியில் இடம் அளித்துள்ள பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், இலவசக் கல்விக்கான ஆணையை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள வி. சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான ராமகிருஷ்ணன் - சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் சத்யா தேவி. ஈரோடு மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்த இந்தத் தம்பதி, அங்குள்ள தனியார் கல்லூரியில் சத்யா தேவியைச் சேர்த்திருந்தனர்.

பொருளாதார வசதியில்லாததால் படிப்பை பாதியில் நிறுத்திய சத்யா தேவி, பெற்றோருடன் கூலி வேலை செய்து வந்தார். இதையறிந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர், தனது எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரியில் சத்யா தேவி படிக்க விரும்பிய பி.எஸ்.சி. சீட் கொடுத்தார்.

நான்காண்டுகள் எந்தக் கட்டணமும் இன்றி, கல்லூரியில் தங்கி பயில்வதற்கான ஆணையை மாணவிக்கு வழங்கினார் பாரிவேந்தர். எதிர்பாராமல் பாரிவேந்தர் செய்த உதவிக்கு, சத்யாதேவியும் அவரது பெற்றோரும் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.