கல்வி

தங்குமிடத்துடன் இலவச கல்வி: ராமகிருஷ்ண மிஷன் அறிவிப்பு

webteam

ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படும் என ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல செயலாளர் சத்யஞானானந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில்“ தாய், தந்தையை (அ) இருவரையுமே இழந்த ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்குமிடத்துடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 115 வருடங்களாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர் இல்லத்தில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலும்,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாலிடெக்னிக் முதலாமாண்டிலும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆம் ஆண்டிலும் கல்வி கற்க தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு உணவு, தங்குமிடம், கல்வி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.


பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பிரிவுகள் உள்ளன. படித்து முடித்த மாணவர்களுக்கு தகுந்த வேலையும் பெற்றுத்தரப்படும்.

இதற்கு http://sites.google.com/view/rkmshome-admissions-2020 லிங்கைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தபால் மூலமும் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி

ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,
எண் 66, பி.எஸ்.
சிவசாமி சாலை,
மயிலாப்பூர்
சென்னை – 600 004

கூடுதல் விவரங்களுக்கு 044-24990264, 044-24992537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
வலைதளமுகவரி: www.rkmshome.org