சென்னை மற்றும் காரைக்காலில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணிபுரிய, 109 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த மற்றும் திறமிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
A1 - பிரிவில் ஜூனியர் டெக்னீசியன் அசிஸ்டெண்ட், ஜூனியர் அசிஸ்டெண்ட், ஜூனியர் மோட்டார் வாகன டிரைவர் மற்றும் ஜூனியர் ஃபையர் சர்வீசஸ்
A2 - பிரிவில் அசிஸ்டெண்ட் டெக்னீசியன் மற்றும் அசிஸ்டெண்ட் கிரேடு-III
W1 - பிரிவில் ஜூனியர் ஃபையர் மேன்
மொத்தம் = 109 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 31.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2019, மாலை 06.00 மணி.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21.02.2019
கம்ப்யூட்டர் வழித்தேர்வு நடைபெறும் உத்தேசமான நாள்: ஏப்ரல் - 2019
சம்பளம்:
A1 - பிரிவு பணிக்கு, ரூ11,000 முதல் ரூ.24,000 வரை
A2 - பிரிவு பணிக்கு, ரூ12,000 முதல் ரூ.27,000 வரை
W1 - பிரிவு பணிக்கு, ரூ10,000 முதல் ரூ.18,000 வரை
தேர்வுக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - 370 ரூபாய்
எஸ்.சி / எஸ்.டி / PwD / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
SBI வங்கியின் எந்த கிளைகளிலும் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்.
ONGC, Power Jyoti A/C No 30827318409 of SBI, Tel Bhavan, Dehradun என்ற முகவரிக்கு SBI படிவத்தில் பூர்த்தி செய்து தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.
வங்கியில் தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரர்கள் அதன் முழு விவரத்தையும் ஆன்லைனில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த வகையிலும் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாது.
செலுத்திய தேர்வுக் கட்டணத்தை எந்த வகையிலும் மீண்டும் திரும்ப பெற இயலாது.
வயது வரம்பு: (20.02.2019 அன்று)
A1 & A2 - பிரிவு பணி:
பொதுப் பிரிவினர்: 18 முதல் 30 வயது வரையும், 21.02.1989 -லிருந்து 21.02.2001 - க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
ஓபிசி(NC) பிரிவினர்: 18 முதல் 33 வயது வரையும், 21.02.1986 -லிருந்து 21.02.2001 - க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி பிரிவினர்: 18 முதல் 35 வயது வரையும், 21.02.1984 -லிருந்து 21.02.2001 - க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
W1 - பிரிவு பணி:
பொதுப் பிரிவினர்: 18 முதல் 27 வயது வரையும், 21.02.1992 -லிருந்து 21.02.2001 - க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
ஓபிசி(NC) பிரிவினர்: 18 முதல் 30 வயது வரையும், 21.02.1989 -லிருந்து 21.02.2001 - க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்.சி பிரிவினர்: 18 முதல் 32 வயது வரையும், 21.02.1987 -லிருந்து 21.02.2001 - க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
A1 - பிரிவு பணிக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவராகவோ, ஐடிஐ படித்தவராகவோ, B.Sc (Physics / Maths) / B.Com படித்தவர்களாகவோ இருத்தல் வேண்டும்.
A2 - பிரிவு பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை, சிவில் / மெக்கானிக்கல் / ஆட்டோ / எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் என்ற துறையில் பயின்றவராக இருத்தல் வேண்டும்.
W1 - பிரிவு பணிக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 3 மாத ஃபையர் மேன் என்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். வாகன ஓட்டுனர் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
முதலில், ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின், https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ - இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்க முடியாது.
மேலும், இதை பற்றிய முழு தகவல் பெற,
https://www.ongcindia.com/wps/wcm/connect/ac227996-9834-4c75-884a-c4a56ab4e359/ChennaiKaraikal2019.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-ac227996-9834-4c75-884a-c4a56ab4e359-my58tG2 - என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.