கல்வி

‘அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை’

‘அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை’

webteam

வேளாண் பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டபோது ஆயிரத்து 118 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களும், 23 வேளாண் பயிற்றுநர்கள் பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 19 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியி‌டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மட்டும் வெளியிடப்‌பட்டுள்ளது. வேளாண் பயிற்றுநர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டால்தான்‌ தேர்வுக்கு தயாராக முடியும் என சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்‌ளனர்.