கல்வி

சென்னை ஐஐடியில் சாதி, மத பாகுபாடு இல்லை: டி.ஆர்.பாலு கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில்

Veeramani

சென்னை ஐஐடியில் சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ யாரையும் வேறுபடுத்தியது இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் சாதி, மத ரீதியான பாகுபாடு நிலவுவதாக, நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், “ சென்னை ஐஐடியில் மாணவர்களின் மன நலனை உறுதி செய்ய 24 மணி நேரமும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்

முன்னதாக, சென்னை ஐஐடியில் சாதியப் பாகுபாடு இருப்பதாகவும் அதனால் கல்லூரியில் இருந்து விலகுவதாகவும் அங்கு உதவிப் பேராசிரியராகப் பணி புரிந்த விபின் புடியதாத் வீட்டில் என்பவர் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஐஐடியில் பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடு குறித்து ஆராய, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.