கல்வி

தகுதிக்கேற்ற வேலை இல்லை: நிதி ஆயோக் தகவல்

webteam

வேலைவாய்ப்பு இல்லாத நிலையை விட, தகுதிக்கும் குறைவான வேலை அளிக்கப்படுவதே முக்கியமான பிரச்சினை என நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் மூன்று நிதி ஆண்டுகளுக்கான வரைவு செயல் திட்டத்தை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை அனைத்து மாநில முத லமைச்சர்களுக்கும், அரசின் முக்கியமான குழுக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகக் கணிப்பின்படி கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை இருந்து வருகிறது. வேலை இல்லாமல் இருப்பதை விட, ஒரு வேலையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் செய்து வருவதாகவும், தகுதிக்குக் குறைவான வேலை வழங்கப்பட்டு வருவதாகவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தைக்குத் தேவையான உற்பத்தியை பூர்த்தி செய்தால் மட்டுமே ’மேக் இன் இந்தியா’ திட்டம் வெற்றிபெறும் என நிதி ஆயோக் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.