நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் நீட் நுழைவைத் தேர்வை கண்டித்து தமிழகத்தில் பல போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர் , 1 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்காக சிறப்பு சட்டம் இயற்றப்படும் என அறிவித்த முதல்வர், நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.