டெல்லியில் உள்ள தேசிய விதைகள் பாதுகாப்பு நிறுவனத்தில், பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிய, 260 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.01.2019 - காலை 11.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2019 - மாலை 05.00 மணி
ஆப்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 03.03.2019
பணி:
துணை பொது மேலாளர் (DGM)
அசிஸ்டெண்ட் (Legal)
மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (Management Trainee)
சீனியர் ட்ரெய்னி (Senior Trainee)
டிப்ளமோ ட்ரெய்னி (Diploma Trainee)
ட்ரெய்னி (Trainee)
ட்ரெய்னி மேட் (Trainee Mate)
மொத்தம் = 260 காலிப்பணியிடங்கள்
வயது:
1. துணை பொது மேலாளர் (DGM): 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2.அசிஸ்டெண்ட் (Legal): 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (Management Trainee): 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.சீனியர் ட்ரெய்னி (Senior Trainee): 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5.டிப்ளமோ ட்ரெய்னி (Diploma Trainee): 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
6.ட்ரெய்னி (Trainee): 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
7.ட்ரெய்னி மேட் (Trainee Mate): 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:
பொது பிரிவினர் / ஓபிசி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கான கட்டணம் - 525 ரூபாய்
எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினர் போன்றோருக்கான கட்டணம் - 25 ரூபாய்
செலுத்திய தேர்வுக் கட்டணத்தை, மீண்டும் திரும்ப பெற இயலாது.
கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்:
1. துணை பொது மேலாளர் (DGM - Vigilance): எம்.பி.ஏ / 2 வருட முதுகலை பட்டயப்படிப்பு / டிப்ளமோ இண்டஸ்ரியல் மேனேஜ்மெண்ட் / பர்சனல் மேனேஜ்மெண்ட் / லேபர் வெல்ஃபேர் / MSW / எம்.ஏ - பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஸன் / LLB - போன்ற ஏதேனும் ஒரு படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் பயின்று, 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
10 வருடங்கள் பணி முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2.அசிஸ்டெண்ட் (Legal): Law பிரிவில் தொழிற்கல்வி பட்டம் முடித்தவராகவும், ஒரு வருட பணி முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3.மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (Management Trainee): B.Sc (Agri) மற்றும் MBA (Agri. BM) / M.Sc (Agri) போன்ற படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று, 60% மதிப்பெண்கள்
பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
4.சீனியர் ட்ரெய்னி (Senior Trainee): M.Sc (Agri) போன்ற படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் பயின்று, 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
5.டிப்ளமோ ட்ரெய்னி (Diploma Trainee): 3 வருட டிப்ளமோ படிப்பை எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் பயின்றவராகவும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ கல்வி
நிறுவனத்தில் பயின்று, 55% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
6.ட்ரெய்னி (Trainee): B.Sc (Agri) போன்ற படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று, 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
7.ட்ரெய்னி மேட் (Trainee Mate): +2 ஆம் வகுப்பில் சயின்ஸ் பாடத்துடன் உயிரியல் பாடத்தையும் படித்தவர்களாகவோ அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவராகவோ இருத்தல் வேண்டும்.
சம்பளம்:
1. துணை பொது மேலாளர் (DGM): மாதம் 70,000 - 2,00,000 ரூபாய்
2.அசிஸ்டெண்ட் (Legal): மாதம் 22,000 - 77,000 ரூபாய்
3.மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (Management Trainee): மாதம் 43,520 ரூபாய்
4.சீனியர் ட்ரெய்னி (Senior Trainee): மாதம் 23,936 ரூபாய்
5.டிப்ளமோ ட்ரெய்னி (Diploma Trainee): மாதம் 23,936 ரூபாய்
6.ட்ரெய்னி (Trainee): மாதம் 18,496 ரூபாய்
7.ட்ரெய்னி மேட் (Trainee Mate): மாதம் 17,952 ரூபாய்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை:
முதலில் www.indiaseeds.com என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அடிப்படை கம்யூட்டர் பயிற்சி பெற்றிருத்தல் சிறப்பு.
மேலும் இதை குறித்த பல்வேறு தகவல்களுக்கு, https://www.indiaseeds.com/career/2019/Advt0119.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.