வெற்றிப்படிக நிகழ்ச்சி புதியதலைமுறை
கல்வி

நாகர்கோவில்|புதிய தலைமுறை, SRM கல்லூரி இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான ’வெற்றிப்படிகள்’ நிகழ்ச்சி!

புதிய தலைமுறையும், SRM college of Agricultural sciences இணைந்து நாகர்கோவில் மாவட்டத்தில் மாணவர்களுக்காக நடத்திய வெற்றிப்படிகள் நிகழ்ச்சி

PT WEB

புதியதலைமுறையும், SRM college of Agricultural sciences இணைந்து நாகர்கோவில் மாவட்டத்தில் மாணவர்களுக்காக நடத்திய வெற்றிப்படிகள் நிகழ்ச்சி..

கடந்த 30.11.2024 அன்று நாகர்கோவில் மாவட்டத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி  மற்றும் SRM college of Agricultural sciences இணைந்து நடத்தும் பன்னிரண்டாம்  வகுப்பு   மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி வெற்றிப்படிகள்  நிகழ்ச்சியானது அல்போன்சா மெட்ரிகுலேஷன்  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா  துவங்கி வைத்தார். 

ஊக்கப் பேச்சாளர் கவிதா ஜவகர் மற்றும் பால தண்டாயுதபாணி (மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கன்னியாகுமரி மாவட்டம்.) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.சஞ்சீவகாந்தி, (பேராசிரியர் எஸ் ஆர் எம் காலேஜ்,)

கிறிஸ்டல் ஜாய்லெட் (மாவட்ட கல்வி அலுவலர் நாகர்கோவில்,) மற்றும் 

லிஸ்பெத், (முதல்வர் அல்போன்சா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி). ஆகியோர் கலந்து கொண்டு +2 தேர்வை எளிதாக கையாண்டு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து மாணவர்களிடையே நம்பிக்கையை விதைத்தனர். 

இதில் 1100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.