கல்வி

நீட்டுக்கு தயார்படுத்தும் மாநகராட்சிப் பள்ளிகள்

webteam

இனி வரும் காலங்களில் நீட் கட்டாயம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில், மாணவ-மாணவிகளை மருத்துவராக்க நீட் பயிற்சி வகுப்புகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது. 

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 25 மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் இவர்களில் மருத்துவ கனவுகளுடன் இருப்பவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் முயற்சியை எடுத்துள்ளது மதுரை மாநகராட்சி நிர்வாகம். தனியார் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாத மாணவ மாணவிகள் 60 பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் உதவியோடு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் மாநகராட்சி ஆணையர் அணிஷ் தெரிவித்தார். இந்த பயிற்சி தங்கள் மருத்துவ கனவு நனவாக உதவும் என்றும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவம் என்பது எட்டும் கனியே என்று கூறும் வகையில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரவித்துள்ளது.