கல்வி

இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி

webteam

மும்பையில் செயல்படும் இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் ஃபிட்டர், பவர் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிப் பணிகள்:
1. டெசிக்னேட்டடு டிரேட்ஸ் (Designated Trades) பிரிவு பணிகள் - 933
2. நான் - டெசிக்னேட்டடு டிரேட்ஸ் (Non - Designated Trades) பிரிவு பணிகள் - 300

மொத்த காலியிடங்கள் = 1,233

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2019

பயிற்சி துவங்கும் காலம்: ஏப்ரல்-2020

பயிற்சி காலம்:
1. டெசிக்னேட்டடு டிரேட்ஸ் (Designated Trades) பிரிவு பணிகள் - 1 வருடம் முதல் 2 வருடங்கள்
2. நான் - டெசிக்னேட்டடு டிரேட்ஸ் (Non - Designated Trades) பிரிவு பணிகள் - 1 வருடம் 

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள், 01.04.1999 ஆம் தேதி முதல் 31.03.2006 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 10ஆம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று அத்துடன் ஐடிஐ சான்றிதழ் படிப்பையோ அல்லது ட்ரேடு தேர்வில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் அவசியம்.

குறிப்பு:
ரிக்கர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஐடிஐ சான்றிதழ் அவசியமில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.bhartiseva.com/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
https://dbsmedia.s3-us-west-2.amazonaws.com/DEO_AB/Advertisement_IT-23.pdf மற்றும் https://dbsmedia.s3-us-west-2.amazonaws.com/DEO_AB/Advertisement_OT-03.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.