தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் உள்ள கல்லூரிகளில் முழுநேர முனைவர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜெயா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின்கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டுவந்த ரூ. 16 ஆயிரம் உதவித்தொகை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டுவந்த ரூ. 25 ஆயிரம் ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போதைய ஆராய்ச்சி மாணவர்களுக்கும், புதிதாக சேரும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.