கல்வி

மாணவர்களின் வீடுகளுக்கே வரும் நடமாடும் பள்ளிக்கூடம் - அசத்தும் ஆந்திரா..!

EllusamyKarthik

கொரோனா பரவலினால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் மூலமாக செல்போன் வழியே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். 

தமிழக அரசு தொலைகாட்சி வழியாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் கணினி மற்றும் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு  உதவும் வகையில் நடமாடும் மொபைல் பள்ளிக்கூடங்களை உருவாக்கியுள்ளது ஆந்திர அரசு. 

இதற்காக ஆந்திராவில் மொத்தமுள்ள 38 லட்சம் மாணவர்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர். அதாவது இணைய மற்றும் மொபைல் சேவை வசதி கொண்ட மாணவர்கள், டிவி மற்றும் ரேடியோ வசதி கொண்ட மாணவர்கள் மற்றும் எந்தவித சாதனங்களும் இல்லாத மாணவர்கள்  என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அதில் சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் எந்தவித சாதனங்களும் இல்லாத மாணவர்களாக உள்ளனர். அவர்கள் பயன்பெறும் வகையில் இந்த மொபைல் பள்ளிக்கூட வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள். 

இந்த வேனில் ஆன்லைன் மூலமாக  கல்வி கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு மூன்று வானங்களை முதல்கட்டமாக இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் மாணவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பி வருகிறது ஆந்திர அரசு.