கல்வி

அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

அமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

webteam

தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் போன்ற பணிகளுக்கு யு.பி.எஸ்.சி நடத்தும் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. அமலாக்க அதிகாரி - Enforcement Officer
2. கணக்கு அலுவலர் - Accounts Officer

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 421 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2020, மாலை 06.00 மணி வரை

வயது வரம்பு:

30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.25
குறிப்பு: எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம்.

குறிப்பு:
பணிகளுக்கேற்ப முன் அனுபவம் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.upsc.gov.in/ அல்லது https://www.upsconline.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத்தேர்வு

எழுத்துத் தேர்வானது, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.upsc.gov.in/sites/default/files/Special-Advt-51-2020-R-Engl.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.