கல்வி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப் பிரிவுகள்- அமைச்சர் பொன்முடி தகவல்

நிவேதா ஜெகராஜா

அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கும் மையங்கள் உருவாக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். 16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி முயற்சிகளை மேம்படுத்த 11 மையங்கள் உருவாக்கப்படும் என்றும், மேலும் 10 அரசு கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் எனவும் பொன்முடி குறிப்பிட்டார்.