கல்வி

பொறியியல் வகுப்பில் எந்த இடமும் காலியாக இருக்காது - அமைச்சர் பொன்முடி விளக்கம்

Sinekadhara

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் வகுப்பில் எந்த இடமும் காலியாக இருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். 

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்." நடப்பு கல்வியாண்டில் பொறியியல் வகுப்பில் எந்த இடமும் காலியாக இருக்காது. பொறியியல் கல்லூரிகளில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

பயோ டெக்னாலஜி படிப்புக்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதவுள்ளார். ஆனால் பயோ டெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் அண்ணா பல்கலைக் கழகத்தில் வகுப்பு தொடங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.