கல்வி

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

JustinDurai
சி.பி.எஸ்.இ போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
'புதிய தலைமுறை'க்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது என்று கூறினார். மேலும், எவ்வளவு சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என்பது ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.