மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாக்களை 5 மாதங்களுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பரிசீலிக்கவுள்ளது.
நீட் தேர்விலிருந்து மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விலக்கு கோரி இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பிய தமிழக அரசு, அவற்றை பரிசீலித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரிலும் கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தினார். இந்நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு அந்த மசோதாக்களை உள்துறை அமைச்சகம் இன்று பரிசீலிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.