கல்வி

மாநகரப் போக்குவரத்துக்கழக தொழில் பயிற்சிகள்.. ஐடிஐயில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

webteam

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக்கழகத் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு கம்மியர், இயந்திர வல்லுநர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஐடிஐ பயிற்சிகளில் சேரும் மாணவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பயிற்சிப் படிப்புகளில் ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதியும் விண்ணப்பமும்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இரண்டு ஆண்டு படிப்பு. விண்ணப்பங்களை குரோம்பேட்டை தொழில் பயிற்சி நிலையத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதளம் மூலம் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

தொடர்பு முகவரி: மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை - 600 044 / 044 29535177, 9445030597

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.9.2020

விவரங்களுக்கு: www.mtcbus.tn.gov.in / mtciti591@gmail.com