கல்வி

மருத்துவ படிப்புகள்: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் இன்று தொடக்கம்

Veeramani

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி,டிஎஸ் படிப்புகளில் பொதுப்பிரிவு மாணவர்களின் கலந்தாய்விற்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

ஆன்லைன் மூலம் முதல் முறை மருத்துவ கலந்தாய்வு - விண்ணப்பம் செய்வது - எப்படி?

tnmedicalselection.org என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இணையத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு tnmedicalselection.org என்ற இணையத்தில் முதலில் கடவுச்சொல்லை மாற்றியமைக்க வேண்டும். Reset password என்பதை கிளிக் செய்ய வேண்டும். உடனே விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்பட்ட உங்கள் தொலைபேசி எண்ணுக்கு OTP வரும். அந்த OTP ஐ டைப் / உள்ளீடு செய்தவுடன் புதிய கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்ளலாம்.

அடுத்ததாக log in செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்த மெயில் ஐடி அல்லது விண்ணப்ப எண் அல்லது விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய log in ஐடி பயன்படுத்தலாம். அதை பயன்படுத்தி log in செய்யும் போது புதிதாக உருவாக்கிய கடவுச்சொல்லை டைப் செய்து உள்ளே நுழையலாம். உள்ளே சென்றவுடன் இடதுபுறம் self details என்ற தலைப்பில் கீழ் பெயர், பாலினம், சமூகம், உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதை சரிபார்த்துக் கொள்ளவும்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை சரிபார்க்க நேரில் செல்ல வேண்டும். வலதுப்புறத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான மையங்களை தேர்வு செய்யலாம். தங்களுக்கு அருகில் உள்ள மூன்று மையங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம். அதன் பின் கலந்தாய்வு கட்டணமாக ரூ.500 ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் இணையத்தில் செலுத்த வேண்டும். கட்டணம் கட்டி முடித்தவுடன் பதிவு செய்யும் நடைமுறை முடியும்.

இந்த பதிவு செய்யும் நடைமுறை 30ம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 1ம் தேதி இரவு 12 மணி வரை செய்யலாம்.

கலந்தாய்விற்கான முன் பதிவு மட்டுமே இன்று செய்ய முடியும், கல்லூரி தேர்வு இன்று செய்ய முடியாது. அகில இந்திய தேர்வு முடிவுகள் வெளியான பின்பே அதை செய்ய முடியும்.