கல்வி

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் மருத்துவக் கலந்தாய்வு

Sinekadhara

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு முதன் முறையாக ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் 5 ஆயிரத்து 822 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும், ஆயிரத்து 430 பி.டி.எஸ் இடங்களும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம். வரும் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு பட்டியலை மாணவர்கள் இறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர், 7-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மாணவர்கள் தேர்வு செய்த மையத்திற்கு நேரில் அழைக்கப்படுவர். வரும் 15ஆம் தேதி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் முடிவுகள் வெளியாகும்.

16-ம் தேதி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளின் தகவல்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து உரிய கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.