கல்வி

மருத்துவ படிப்புக்காண விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது

மருத்துவ படிப்புக்காண விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது

webteam

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது. அ‌தற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் ஜூலை 7ஆம் தேதி வரை 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்ப ஜூலை 8ஆம் தேதி கடைசி நாள். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.