கல்வி

சில பல்கலைக் கழகங்களின் அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்

Sinekadhara

சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதை எதிர்த்து ராம்குமார் தொடர்ந்த வழக்கில் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/_XbaTQ2U1qc" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருந்தபோது முடிவுகளை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரியர் தேர்வை ரத்துசெய்ய பல்கலைக்கழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே நேரடியாகவோ, ஆன்லைனிலோ தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக் கழகங்கள் அறிவிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.