கல்வி

குரூப் 4, வீஏஒ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

குரூப் 4, வீஏஒ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

webteam

குரூப் 4 மற்றும் ‌கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்காக ‌விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். 

குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ‌தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‌இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்யாதவர்கள் உடனடியாக ‌பதிவு செய்ய ‌தமிழ்நாடு அரசுப்பணியாளர் தே‌ர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், நிரந்தர‌ப்பதிவு செய்யாதவர்கள் ரூ.150 செலுத்தி, நிரந்தரப்பதிவு செய்த பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‌ தொழில்நு‌ட்பக் காரணங்களால் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.