கல்வி

முதுநிலை நோய்ப் பரவியல் படிப்பு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

webteam

தமிழகத்தில் எம்எஸ்சி நோய்ப்பரவியல் (எபிடமாலஜி) படிப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்எஸ்சி நோய்ப் பரவியல் இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தில் நான்கு இடங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வு மூலம் அவர் நிரப்பப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைமுறையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு: 79043 64568