கல்வி

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள்... பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

webteam

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பிளஸ் டூ மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டப்படிப்புகள்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்  தொழிலாளர் மேலாண்மையில் பி.ஏ மற்றும் எம்.ஏ., தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பி.ஜி.டி.எல்.ஏ பட்டயப் படிப்பு, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டயப் படிப்புகளும் உள்ளன.

இங்கு கற்பிக்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. பட்டயப்படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றவை. தொழிலாளர் மேலாண்மை படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதியும் விண்ணப்பமும் 

பிளஸ் டூ  முடித்த மாணவர்கள் பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பி வைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 200.  பட்டியல் இனத்தவருக்கு ரூ.100. சாதிச் சான்றிதழ் நகல் தேவை.  விண்ணப்பக் கட்டணத்தை  Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5  என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையை  விண்ணப்பத்துடன் இணைத்து அஞ்சல் வழியில் அனுப்பிவைக்கவேண்டும். மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் படித்த  மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளர் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. வளாக நேர்காணல் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் (தற்போது தொழிலாளர் உதவி ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு தொழிலாளர் மேலாண்மையில் இளங்கலை, முதுகலை  மற்றும் பட்டயப்படிப்புகளை முன்னுரிமைத் தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை), முனைவர் இரா,ரமேஷ்குமார், (உதவிப் பேராசிரியர்),  தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்.5 காமராசர் சாலை, சென்னை - 5.  தொடர்பு எண்கள்: 044 - 28440102 / 28445778 /  9884159410

விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 5.8.2020