கல்வி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவோம் - கே.பி. அன்பழகன்

Sinekadhara

அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவோம் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டுவரை மத்திய அரசு கொடுக்கக்கூடிய நிதியின்படி 50% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டது. இந்த நிலையில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசின் புதிய நிலைப்பாடான அனைத்து பிரிவினரையும் சேர்த்து 69% இட ஒதுக்கீடு திட்டத்தின்கீழ் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

எந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதற்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் என கூறியிருக்கிறார்.