கல்வி

அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது: கைலாஷ் சத்யார்த்தி

webteam

அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது என்று நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மணபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறிய கைலாஷ் சத்யார்த்தி, உலகம் முழுவதும் 100 மில்லியன் குழந்தைகளுக்கு கல்வி, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். கல்விகள் மறுக்கப்படுவதுடன் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.