கல்வி

பயிற்சி வகுப்புகளா? சுயமாக படிப்பதா? - சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஐபிஎஸ் அதிகாரியின் டிப்ஸ்

EllusamyKarthik

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ட்விட்டர் மூலம் டிப்ஸ் கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரியான லக்ஷய் பாண்டே.

கடந்த 2018 சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 316வது இடத்தை அவர் பிடித்திருந்தார். தற்போது தலைநகர் டெல்லியில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தான் தயாரானது எப்படி? எதனி அவசியமாக படிக்க வேண்டும்? என்பது மாதிரியான விவரங்கள் அனைத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அவர். 

அதில் அவர் சொல்லியுள்ளது... 

“சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்வது எப்படி என்பதை சொல்ல விரும்புகிறேன். எளிய உத்தியை கடைபிடியுங்கள். பயிற்சி வகுப்புகளை காட்டிலும் சுயமாக படிப்பது அவசியம். குறைந்த அளவிலான புத்தகங்களை படித்தாலும் அதனை அதிகம் முறை மீள்பார்வை செய்வது அவசியம். இதனை எனது தனிப்பட்ட அனுபவம் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வை கிளியர் செய்த சிலரின் அனுபவங்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து சொல்கிறேன். 

-முதலில் புத்தகங்களை வாங்குகள். என்.சி.இ.ஆர்.டி 11 ஆம் வகுப்பு, இந்திய மற்றும் உலக புவியியல், நவீன வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் மாதிரியான புத்தகங்களை வாங்க வேண்டும். 

-ஒவ்வொரு நாளுக்காமன டைம் டேபிளை போட்டு, அதற்கு ஏற்ற வகையில் நேர மேலாண்மையை கையாளுங்கள். 

-முதலில் POLITY புத்தகத்தை படிப்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக படிக்க தொடங்க வேண்டும். அப்படி படிப்பதை தவறாமல் அடிக்கடி மீள்பார்வை செய்ய வேண்டும். 

எதை செய்யக்கூடாது?

6 ஆம் வகுப்பிலிருந்து என்சிஇஆர்டி புத்தகங்களைப் படிப்பது, பயிற்சியில் சேருவது, செய்தித்தாள்களை படிக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவது, பல புத்தகங்களைப் படிப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட பதிப்பின் கரண்ட் அபேர்ஸ்களை படிப்பதெல்லாம் தேவை இல்லாதது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.