கல்வி

10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இன்ஃபோசிஸ் நிறுவனம் முடிவு 

webteam

பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பத்தாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் நிறுவனம், உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்ட ஏழாயிரம் பணியாளர்களை நீக்க அண்மையில் முடிவெடுத்தது. இதே பாணியை ஐடி துறையில் பிற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. 

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட, ஐடி துறையில் மிகவும் பிரபலமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் இந்தப்‌பட்டியலுக்கு வந்துள்ளது. உயர்பதவிகள் மற்றும் மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை 3 மாதங்களில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ். சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் இரண்டாயிரத்து 200 பேர் வேலை இழக்கின்றனர். 

மத்திய நிலையில் உள்ள பல்வேறு பதவிகளை வகிக்கும் நான்காயிரம் முதல் பத்தாயிரம் பே‌ரும் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கைகு ஆளாகி, பணியை இழக்கின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் போல, கேப்ஜெமினி நிறுவனமும் 500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.