கல்வி

வேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019!

webteam

இந்தியா முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் விவசாய படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு (ICAR - AIEEA) எழுத வேண்டும். மத்திய மனிதவளத்துறையின் கீழ் செயல்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியுடன் (NDA) இணைந்து இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் (ICAR) அமைப்பு தேர்வை நடத்துகிறது. இந்த நுழைவுத்தேர்வை எழுதுவதன் மூலம் ஊக்கத்தொகையுடன் வேளாண்மை படிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும்.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2019
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 01.05.2019
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 01.07.2019
நுழைவுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 17.07.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 16 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.


தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.700
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மூன்றாம் பாலினத்தவர் / மாற்றுத்திறனாளி - ரூ.350

கல்வித்தகுதி:
பிளஸ்-டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற பாடங்களில் பயின்று, தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.nta.ac.in/ , https://ntaicar.nic.in/GenRegSys/Root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgO5XLhZdRMmxTPJ/3KOhnEAq3GhzGKDxIIypWftT4Fl1 - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு முறை:
* தேர்வு கால அளவு: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
* மொத்த மதிப்பெண்கள்: 150 
* ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 50 வினாக்கள் அமையும்.
* தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
* ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்வித்தாள் இடம்பெறும்.

மேலும், இது குறித்த முழு தகவல் பெற, https://ntaicar.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=5&iii=Y (அல்லது) https://icar.org.in/sites/default/files/Notice-01042019.pdf  - என்ற இணையதள முகவரியில் அறியலாம்.