கல்வி

இனி அரசுப் பள்ளிகளில்‌ ஏப்ரல் 1 ஆம் தேதியே மாணவர்கள் சேர்க்கை..!

Rasus

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இனி ஏப்ரல் ஒன்றாம் தேதியே ‌மாணவர்கள் சேர்க்கையை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் தொடங்குவதால், மாணவர்கள் அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுவதாகவும், எனவே, அரசுப் பளிகளில் மாணவர்கள் சேர்க்கை‌யை ஏப்ரல் ஒன்றாம் தேதியே தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து 11 வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கையையும் ஏப்ரலிலேயே தொடங்கி, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விதிமுறைகளில் உள்ள வயது வரம்போடு சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.