நீட் தேர்வு தேவையில்லை என்று விளக்கும் விதமாக ட்விட்டரில் பதியப்படும் கருத்துகள் #NoNeedNeet என்ற ஹெஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு நீட் தேர்வு நடைமுறையைக் கொண்டுவந்ததால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களும், சமுதாயத்தில் பின் தங்கிய ஏழை மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்கிற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேவையில்லை என்றும் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.