12-ஆம் வகுப்பு தேர்வு எழுத தனித் தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் என்றும் ஆனால் தேர்வு முடிவுகளே இறுதியானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.