கல்வி

போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் இலவச பயிற்சி: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை வழங்குகிறது..!

webteam

ஊரடங்கு காலத்தில், நேரடியாக வழங்கப்படும் பயிற்சிகள் இணையவழிப் பயிற்சிகளாக மெல்ல மாறிவருகின்றன. தற்போது போட்டித் தேர்வர்களுக்கு ஆன்லைன் வழியாக இலவசப் பயிற்சிகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆன்லைன் இலவசப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் மற்றும் ஐபிபிஎஸ் பிஓ தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி பயிற்சி தொடங்குகிறது.

ஏற்கெனவே போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட்டு வந்தன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

விவரங்களுக்கு: https://tamilnaducareerservices.tn.gov.in