கல்வி

அக்.25 முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் : அமைச்சர் பொன்முடி

அக்.25 முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் : அமைச்சர் பொன்முடி

sharpana

பொறியியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் இருக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். பயோடெக்னாலஜி படிப்பிற்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதவுள்ளதாகவும், மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி, பொறியியல் படிப்பில் இதுவரை 5ஆயிரத்து 970 பேர் சேர்ந்துள்ளதாகவும், அவர்களிடம் கட்டணம் வசூலித்தால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால், 3ஆயிரத்து 443 கெளரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.