கல்வி

ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்திட்ட வழிமுறைகள் : தமிழக அரசு சார்பில் பயிற்சி

webteam

சென்னையில் உள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் சார்பில்  ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகளும், சட்டத்திட்டங்களும் குறித்த பயிற்சி வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய வலைத்தளத்தின் மூலம் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.