கல்வி

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வு, மும்மொழிக் கொள்கை : புதிய கல்விக்கொள்கை அம்சங்கள்..!

webteam

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் எனவும், மும்மொழிக்கொள்கையும் புதிய கல்விக்கொள்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையின்படி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அறிவிப்புகள் உயர்கல்வித்துறை செயலாளர் மூலம் வெளியிடப்பட்டது. அதன்படி, 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை முறையான அமைப்பு ஒன்று நடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் எனவும், பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் ஒரு விருப்ப மொழியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.