கல்வி

தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்விக்கு அனுமதி

jagadeesh

தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்வி வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

வரும் ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்திட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மிகுந்த பலன் தருவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கற்பதன் மூலம் பொறியியலின் அடிப்படை அம்சங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்தார். தற்போது 7 மொழிகளில் பாடங்கள் இருக்கும் நிலையில் அடுத்து இது மேலும் 11 மொழிகளில் வழங்கப்படும் என்றும் அனில் சஹஸ்ரபுத்தே கூறியுள்ளார். ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடங்களை மொழி பெயர்க்க மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.