தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது. உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 2 ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி கடைசி நாள். ஜூன் 3-ம்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் ஜூன் 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பிக்கும் இணையதளம் முகவரி நாளை அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.