கல்வி

பொறியியல் கவுன்சலிங்: சிறப்புப் பிரிவினருக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை

webteam

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற சிறப்புப் பிரிவினருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படவுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 2,413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் 1300 பேர் வரை முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் இன்று வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீட்டு ஆணை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) வழங்கப்படும். சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 7,435 இடங்கள் உள்ளன. அதில் 6 ஆயிரம் இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.