கல்வி

உ.பி: பள்ளிக்கு தினமும் படகில் சென்று வரும் பதினோராம் வகுப்பு மாணவி!

EllusamyKarthik

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், வெள்ளம் காரணமாக 11-ஆம் வகுப்பு பயின்று வரும் சந்தியா சஹானி என்ற மாணவி தினமும் பள்ளிக்கு படகில் சென்று கல்வி பயின்று வருகிறார்.

“என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாத காரணத்தினால் முறையாக என்னால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட போது எங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் பள்ளிக்கு படகில் சென்று வர முடிவு செய்தேன். இப்போது அதை செய்து வருகிறேன்” என்கிறார் சந்தியா சஹானி. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கு சென்று மாணவர்கள் கல்வி பயில்வது சவாலான காரியமாக மாறியுள்ளது. இருப்பினும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வருகின்ற காரணத்தினால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.