ரயில்வே லெவல் ஒன் முகநூல்
கல்வி

ரயில்வேயில் லெவல் ஒன் நிலை பணிகள் | தளர்த்தப்பட்ட கல்வித்தகுதி!

ரயில்வேயில் லெவல் ஒன் நிலை பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி தளர்த்தப்பட்டுள்ளது.

PT WEB

ரயில்வேயில் லெவல் ஒன் எனப்படும் ஆரம்ப நிலை பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது அதற்கு இணையான தொழிற் படிப்பு படித்தவர்கள், தேசிய பணிப்பழகுநர் சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ டிப்ளமோ பெற்றிருந்தால் மட்டுமே லெவல் 1 பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதில் மாற்றம் கொண்டுவந்து சுற்றறிக்கையை இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.

பல்வேறு ரயில்வே பிரிவுகளில் உதவியாளர், பாயின்ட்ஸ்மேன், தண்டவாள பராமரிப்பாளர் ஆகிய பணிகள் ஆரம்ப நிலை பணிகளாக கருதப்படுகின்றன. ரயில்வேயில் ஆரம்ப நிலை பணிகளில் 32 ஆயிரம் இடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு வரும் 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.