பாடத்திட்டம் சிறப்பாக இருப்பினும் அது மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற ஆசிரியர்கள் தேவை என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கற்பித்தல் முறை, மதிப்பீட்டு முறையை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் அறிவியல் பாடம் கற்றத்தரப்பட உள்ளது. ஆறாம் வகுப்பிலேயே அறிவியல் தொழில்நுட்பம், அல்ஜீப்ரா, இயற்பியல், வேதியியல், உயிரியல், புள்ளியியல் போன்ற பாடங்கள் இடம்பெறவுள்ளன.
ஏழாம் வகுப்பு முதல் அணுசக்தி குறித்து விரிவான பாடங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ம் வகுப்புகளில் விண்வெளி கல்வி அறிமுகம் செய்யப்படுகிரது. பத்தாம் வகுப்பில் பயன்பாட்டு வேதியியல், பயன்பாட்டு உயிரியல் பாடங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தேவை என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.