காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மொபைல் செயலியில் 11 வகுப்பு காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் லீக்கானதாக செய்தி வெளியானது. ஆனால் அது முன்கூட்டியே நடைபெற்ற வினாத்தாள் தான் மொபைலில் வெளியாகியுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கையை தேர்வு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.