கல்வி

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்”-அமைச்சர் செங்கோட்டையன்

webteam

12-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது.


இந்நிலையில் கோபிசெட்டி பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசியதாவது “ ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறிய நிலையில் அந்த முடிவில் தற்போது சிக்கல் நீடிக்கிறது. முதல்வரிடம் ஆலோசித் பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றி கூற முடியும். பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்” எனக் கூறினார்.